இலங்கையர்களுக்கான மூன்றாவது கொரோனா தடுப்பூசியான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாளை (1) தொடக்கம் ஆரம்பமாகவுள்ளதென சுகாதார சேவை பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். இதில் முதற்கட்டமாக சுகாதார தரப்பினருக்கே வழங்கப்படவுள்ளது என்றார்.

குறித்த பூஸ்டர் தடுப்பூசியானது, இரண்டாவது தடுப்பூசி செலுத்தப்பட்டு, 6 மாதங்களின் பின்னரே செலுத்தப்படும் என்றார்.

இதில் முன்னுரிமையாளர்களாக சுகாதார தரப்பினர், முப்படையினர், அதேப்போல் விமான நிலையம், துறைமுகம் மற்றும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடையவர்களுக்கு செலுத்தப்படும் என்றார்.