வவுனியா செட்டிக்குளம் தெற்கு பிரதேச சபைக்குட்ட மெனிக்பாம் கல்லாறு பாலம் பகுதியில் இ்ன்று (05) காலை 8.05 மணியளவில் செல்பி எடுக்க முயன்ற இளைஞன் புகையிரத்துடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.

மன்னார் மத்திய புகையிரத நிலையத்திலிருந்து அனுராதபுரம் புகையிரத நிலையம் நோக்கி காலை பயணத்தினை ஆரம்பித்த புகையிரதம் மெனிக்பாம் கல்லாறு பாலத்தினை அண்மித்துள்ளது இதன் போது கல்லாறு பாலத்தில் இரு இளைஞர்கள் செல்பி எடுத்துக்கொண்டிருந்துள்ளனர்.

புகையிரம் வருகின்றமையினை அவதானித்த ஓர் இளைஞன் ஆற்றினுள் குதித்ததுடன் மற்றைய இளைஞன் புகையிரத்தில் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் செட்டிக்குளம் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதுடன் நோயாளர் காவு வண்டி மூலம் வைத்தியசாலைக்கு சடலம் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

இவ் விபத்தில் 21 வயதுடைய முருங்கன் பகுதியினை சேர்ந்த சுரேஸ் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.