நீதி அமைச்சர் பதவியிலிருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் இராஜினாமா செய்து கொள்வதற்கான  இரண்டு இராஜினாமாக் கடிதங்களை அலி சப்ரி அனுப்பி வைத்துள்ளார். அவ்விரு இராஜினாமா கடிதங்களையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக் கொள்ளவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரே நாடு- ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி, பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டது.

ஆனால் இந்த விஷயத்தில் தன்னிடம் எவ்விதமான ஆலோசனைகளும் பெறவில்லை என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது