நகரங்களுக்கு இடையிலான கடுகதி ரயில் சேவைகள், எதிர்வரும் திங்கட்கிழமை (08) முதல் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.

இரவு தபால் ரயிலை இயக்குவது மற்றும் இரவு 7.00 மணிக்குப் பின்னர், வழக்கமான கால அட்டவணையில் ரயில்களை இயக்குவது தொடர்பில் விவாதித்த பின்னர் எதிர்காலத்தில் திட்டங்கள் வரையப்படும் என்றார்.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அமுல்படுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை நவம்பர் 1ஆம் திகதி முதல் நீக்கப்பட்டதையடுத்து, அலுவலக ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

எனினும், இரவு 7.00 மணிக்குப் பின்னர், நீண்ட தூர மற்றும் குறுகிய தூர ரயில் சேவைகள் வழமைபோல் இடம்பெறவில்லை.

தற்போதைய முறைப்படி, பயணிகளின் தேவைக்கேற்ப இரவு 7.00 மணிக்கு பின்னர் ரயில்கள் இயக்கப்படும் என்றார்.