Header image alt text

அலட்சிய நடத்தை’ காரணமாக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் நிறுவனத்தின் நற்பெயர் இழப்பு ஆகியவற்றுக்கான இழப்பீட்டுத் தொகையாக 8 மில்லியன் அமெரிக்க டொலர்களை (ரூ.160 கோடி) வழங்குமாறு கோரி, சீனாவின் சேதன உர உற்பத்தியாளரான குவின்ங்டாவோ சீவின் பயோடெக் குறூப் கம்பனியானது, தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.  Read more

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 13 ஆண்களும் 06 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,875 ஆக அதிகரித்துள்ளது. Read more

நாட்டில் மேலும் 512 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 545,768 ஆக அதிகரித்துள்ளது.

பொது இடங்களுக்குள் நுழையும் பொது மக்களுக்கு தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் அனுமதி அளித்துள்ளது. இதேவேளை, இது தொடர்பில் கருத்துரைத்துள்ள சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, “விரைவில் அதனை அரசாங்கம் அமுல்படுத்தும்”  என்றார்.

மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அவருடன் 12 பேர் கொண்ட குழுவினர் வந்துள்ளதுடன், இக்குழுவினர் நாளைய தினம் இலங்கைக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு மாலைத்தீவு திரும்ப உள்ளனர்.