கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தடுக்கும் விதத்தில் சட்ட ரீதியான நிலமையை கொண்டு வருவதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் நேற்றைய தினம் சட்டமா அதிபரின் பதில் கிடைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இரண்டு தடுப்பூசியையும் செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதற்கு தடை எதிர்காலத்தில் விதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.