கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள இடங்களில் ஒன்றுகூடல் தொடர்பில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சுகாதார அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்திற்கு அமைய, அதிவிசேட வர்த்தமானியினூடாக புதிய கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, முழு நாட்டிற்கும் அதிகாரம் பெற்றுள்ள உத்தியோகத்தர் ஒருவரால் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்காக பிறப்பிக்கப்படும் கட்டளைகளும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அனுமதி பெறாது ஒன்றுகூடல்களை நடத்தக்கூடாது என அதிவிசேட வர்த்தமானியில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.