யாழ்ப்பாணம் – பொம்மைவெளி நாவாந்துறை வீதியில் இருந்து 81 மில்லிமீற்றர் நீளமுடைய எறிகணை ஷெல் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய இந்த ஷெல் கைப்பற்றப்பட்டுள்ளது.

யுத்த காலத்தில் இது கைவிடப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.