ஜேர்மனியின் ludwigsbug நகரத்தில் வசிக்கும் திருமதி பவானந்த் அவர்கள் தனது பிறந்தநாளை (17.09 2021) முன்னிட்டு ரூ 50,000/- நிதியினை, கழகத்தின் ஜேர்மன் கிளையின் அனுசரனையுடன், மட்டக்களப்பின் கல்லடிக் கிராமத்தில் வாழும் கழக உறுப்பினர் பா.சிவசாமி என்பவரின்
வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்திற்காக வழங்கியுள்ளார்.

பாடசாலைக்கு செல்லும் இரண்டு குழந்தைகளையும், சுகவீனமான பெண் பிள்ளையையும் உள்ளடக்கிய குடும்பத்தின் தலைவரான கழக உறுப்பினர், தற்பொழுது கூலி வேலைக்கு செல்வதன் மூலமே தன் குடும்பத்தின் வாழ்வைக் கொண்டு செல்கிறார். பல்பொருள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடாத்துவதற்கான நிதியுதவிக்காக எற்கனவே கோரிக்கை ஒன்றை மாவட்ட நிர்வாகத்திடம் முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி யின் மட்டக்களப்பு மாவட்ட கிளையைச்சேர்ந்த ம.நிஸ்கானந்தராஜா, ந.ராகவன், கா.கமலநாதன் ஆகியோரால் 14-11-2021ம் திகதி இவ் உதவித் தொகை வழங்கிவைக்கப்பட்டது.