கழகத்தின் அதி சிரேஷ்ட உறுப்பினரும், செயலாளருமான அமரர் சுப்பிரமணியம் சதானந்தம் (தோழர் ஆனந்தி அண்ணர்) அவர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில் இணைய சூம் வழியிலான அஞ்சலிக் கூட்டம் இலங்கை நேரப்படி இன்று மாலை 05.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரையில் இடம்பெற்றது.

நிகழ்வினை தோழர் கோபி அவர்கள் தொகுத்து வழங்கினார்.

இதன்போது தலைமையுரையினை கட்சியின் பொருளாளர் தோழர் பவன் அவர்கள் ஆற்றினார். தொடர்ந்து கழகத்தின் உபதலைவர்களில் ஒருவரான தோழர் ஆர் ஆர், தோழர் குகன்(வவுனியா), கழகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான இணைப்பாளர் தோழர் ஜெகநாதன், கழகத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தோழர் மோகன், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தோழர் ராஜா ,

யாழ் மாவட்ட அமைப்பாளர் தோழர் கஜதீபன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் தோழர் யோகன், கழகத்தின் மலையக செயற்பாட்டாளர் தோழர் கமலநாதன், அம்பாறை மாவட்ட அமைப்பாளர் தோழர் சங்கரி, தோழர் ஜபார், கட்சியின் தேசிய அமைப்பாளர் தவராஜா மாஸ்டர்,

சுவிஸ் தோழர் ரஞ்ஜன், கனடா கிளையின் அமைப்பாளர் தோழர் குணபாலன், சுவிஸ் கிளை அமைப்பாளர் தோழர் ஆனந்தன், பிரான்ஸ் கிளை அமைப்பாளர் தோழர் ரங்கா,

பிரித்தானிய கிளை அமைப்பாளர் தோழர் பாலா, சிங்கப்பூரிலிருந்து தோழர் கீர்த்தி, பிரித்தானியாவிலிருந்து தோழர்கள் கிருஷ்ணன், முகுந்தன், கமலி, அல்வின்,

கழகத்தின் உப தலைவர்களில் ஒருவரான தோழர் விசு, தோழர் தயாபரன்(யாழ்), சுவிஸ் தோழர் சிவா, தோழர் செல்வம்(யாழ்), தோழர் மணியம்(கிளிநொச்சி), பிரித்தானியாவிலிருந்து தோழர் சுரேஸ் சுரேந்திரன்,

கழகத்தின் தலைவரும் யாழ் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தோழர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் அஞ்சலி உரை நிகழ்த்தினார்கள்.

தொடர்ந்து கனடா தோழர் செல்வம், கழகத்தின் உப தலைவர்களில் ஒருவரான தோழர் கேசவன் ஆகியோரால் அனுப்பி வைக்கப்பட்ட அஞ்சலி உரை வாசிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கழகத்தின் நிர்வாக செயலாளர் தோழர் பற்றிக் அவர்கள் நன்றியுரை ஆற்றியதுடன் அஞ்சலி நிகழ்வு நிறைவு பெற்றது.