வலி கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட ஊரெழு கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தால் இடம்பெயர்ந்து பாரதி முன்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் லண்டன் கிளையின் அனுசரணையில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்களும், புடவைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த உதவிப் பொருட்களை கழகத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினருமான பா.கஜதீபன், சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் மற்றும் ஊரெழு கிராம அபிவிருத்தி கழகத்தின் தலைவர் முகுந்தன் ஆகியோர் இணைந்து வெள்ளத்தால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்களிடம் கையளித்தனர்.