வடமராட்சி இராஜ கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு தொகுதி உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் லண்டன் கிளையின் நிதி அனுசரணையில் குறித்த உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இவற்றை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பா.கஜதீபன், சாவகச்சேரி நகர சபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் ஆகியோர் இணைந்து ஜே/363 கிராம சேவகர் பிரிவின் கிராமிய செயலகத்தில் வைத்து கிராம சேவையாளர் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் உள்ளிட்டவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.