நாடளாவிய ரீதியிலுள்ள அரச பாடசாலைகள் அனைத்தும் திறக்கப்படும் என்று கல்வியமைச்சர் தினேஸ் குணவர்தன, பாராளுமன்றத்தில் இன்று (15) அறிவித்தார். அதற்கமைய, அனைத்து வகுப்புக்களும் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பின்னர், பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் கட்டங்கட்டங்களாக ஆரம்பிக்கப்படுகின்றன. இரண்டு கட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.