நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரச பாடசாலைகளில் இதுவரை ஆரம்பிக்கப்படாத அனைத்து தரங்களையும் அடுத்த வாரத்தில் இருந்து ஆரம்பிக்க முடியும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவித்திருந்தார்.
அதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் தரம் 6-7-8-9 இன் கல்வி நடவடிக்கைகள் திங்கட்கிழமை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் இன்று(16) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலை கல்வி நடவடிக்கைகள் சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளின் பேரில் நான்கு கட்டங்களாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.