ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான முஹம்மட் சஹ்ரான் ஹாஷிமுடன் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி வந்த நபரொருவர், பயங்கரவாத குற்றத் தடுப்புப் பிரிவினரால், நேற்றிரவு (16) கைது செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினரால் உயித்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையிலேயே, காத்தான்குடி 4ஆம் பிரிவைச்சேர்ந்த 37 வயதுடைய கே.ஜி.பி. ஜவ்ராஸ் என்பவரை அடையாளம் கண்டுகொண்ட பயங்கரவாத குற்றத் தடுப்பு பிரிவினர் அந்நபரை, சம்பவதினமான நேற்றிரவு அவரது வீட்டில் வைத்து கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.