கலகொட அத்தே ஞரனசாரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியானது வடக்குக்கு விஜயம் செய்துள்ளது. வடக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்வது தொடர்பான விசேட வேலைத்திட்டங்கள் பல செயற்படுத்தவுள்ளதாகவும் இச்செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, நேற்றைய தினம் வுவுனியா மாவட்ட மக்களைச் சந்தித்து, அவர்களின் பிரச்சினைகள் குறித்து அறிந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களின் பிரச்சினைகள் என்ன என்பது குறித்து தாம் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், அது தொடர்பில் அறிந்துகொண்டதாகவும் அதனை யோசனையாக தயாரித்து, ஜனாதிபதியிடம் கையளிப்பதே தமது எதிர்பார்ப்பு என்றார்.