6 முதல் 9 வரையான தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகள் நாளை (22) மீண்டும்  ஆரம்பிக்கப்படவுள்ளன. அண்மையில், தரம் ஒன்று முதல் 5 வரையிலான வகுப்புகளும் 10 முதல் உயர்தர வகுப்புகளும்  ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் நாளை (22) ஆரம்பிக்கப்படவுள்ளன.

கொரோனா தொற்று நிலையை அடுத்து, பாடசாலைகள் நீண்ட காலம் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.