ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் பொதுச்செயலாளர் தோழர் ஆனந்தி அண்ணர் அவர்களின் 31ஆம் நாள் நினைவாக புளொட் சுவிஸ் தோழர்கள் ஜெகன், குமார், ஆனந்தன், வரதன், சிவா ஆகியோரின் அனுசரணையில் மாங்குளத்தில் அமைந்துள்ள நல்லாயர் சிறுமியர் இல்லத்தில் உள்ள பிள்ளைகளுக்கு இன்று மதியநேரச் சிறப்புணவு வழங்கப்பட்டது.

கட்சியின் பொருளாளர் தோழர் பவன், கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் தவராஜா மாஸ்டர், தோழர் யூட் ஆகியோர் இதில் கலந்து கொண்டு நினைவுரை ஆற்றியதுடன், அனுசரனை வழங்கிய சுவிஸ் தோழர்களுக்கு நன்றியையும் தெரிவித்தார்கள்.