2022 ஜனவரி முதலாம் திகதியிலிருந்து அனைத்து முச்சக்கர வண்டிகளும் மீட்டர் டேக்ஸிகளாக (Meter Taxi) மாற்றப்படுமென போக்குவரத்து இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன் பின்னர் 3 மாதங்களுக்குள் அனைத்து பிரதேசங்களிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் மீட்டர் இல்லாது வாடகை முச்சக்கர வண்டிகளை செலுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம எச்சரித்துள்ளார்.