கழகத்தின் செயலாளர் தோழர் ஆனந்தி அண்ணர் அவர்களுடைய 31 ஆம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு வவுனியா ஓர்கன் விசேட தேவைக்குட்பட்ட சிறுவர் பாடசாலைப் பிள்ளைகளுக்கு இன்று விசேட மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது.

கழகத்தின் சுவிஸ் கிளை தோழர்கள் ஜெகன், குமார், ஆனந்தன், வரதன், சிவா ஆகியோரின் அனுசரணையில் மேற்படி மதிய உணவு வழங்கும் செயற்பாடு இடம்பெற்றது.

இதன்போது தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தோழர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்), கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் குகன், தோழர் காண்டீபன் ஆசிரியர் மயூரன் ஆகியோர் கலந்து கொண்டு விசேட உணவு வழங்கி வைத்தனர்.