சுகாதாரத் துறையைச் சேர்ந்த 15 தொழிற்சங்கங்கள், இன்று (24) முதல் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ள 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தால், வைத்தியசாலைகளுக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகள் கடும் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

தாதியர்கள் மற்றும் துணை மருத்துவ சேவைகள் துறையில் உள்ள தொழிற்சங்கங்களால், பதவி உயர்வு முறைகேடுகள், சம்பள ஏற்றத்தாழ்வை நீக்குதல், முறையான பதவி உயர்வு முறையை உருவாக்குதல், சுகாதார நிர்வாக சேவையை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.