கிண்ணியா- குறிஞ்சங்கேணி படகு விபத்தில் அறுவர் உயிரிழந்த விவகாரம் தொடர்பில் கிண்ணியா நகர சபைத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறிஞ்சங்கேணி களப்பு பகுதியில் பயணிகள் போக்குவரத்துக்காக படகு சேவைக்கு கிண்ணியா நகரசபை அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே கிண்ணியா நகர சபைத் தலைவர் கைது செய்யப்பட்டார்.

அதன்பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, டிசெம்பர் 9 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.