கழகத்தின் செயலாளர் தோழர் ஆனந்தி அண்ணர் அவர்களுடைய 31 ஆம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை சக்தி மகளிர் சிறுவர் இல்ல பிள்ளைகளுக்கு (25-11-2021) இன்று விசேட உணவு வழங்கி வைக்கப்பட்டது.

கழகத்தின் சுவிஸ் கிளை தோழர்கள் ஜெகன், குமார், ஆனந்தன், வரதன், சிவா ஆகியோரின் அனுசரணையில் மேற்படி மதிய உணவு வழங்கும் செயற்பாடு இடம்பெற்றது.

இதன்போது ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்) யின் உபதலைவர்களுள் ஒருவரும், மண்முனை மேற்கு பிரதேச சபையின் உப தவிசாளருமான பொ.செல்லத்துரை (தோழர் கேசவன்), கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான ம.நிஸ்கானந்தராஜா (தோழர் சூட்டி), கட்சியின் மத்தியகுழு உறுப்பினர்களான தோழர்கள் ந.ராகவன்,கா.கமலநாதன், க.கிருபைராஜா, மண்முனை தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் புஷ்பலிங்கம், மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர் சண்முகராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.