டெல்டா பிறழ்வை விட பத்து மடங்கு சக்தி வாய்ந்த புதிய வைரஸ் கண்டுப்பிடிக்கப்பட்டள்ளது. இது, ‘கொவிட் 19’ மாறுபாடாகும் என்று தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு பேரழிவு தருமென எச்சரித்துள்ளது.

புதிய பிறழ்வு தென் ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், கொவிட் தொற்றாளர்கள் திடீரென அதிகரித்துள்ளதை அடுத்தே, இந்த புதிய வைரஸ் பிறழ்வு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

B.1.1.529 என பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ், ஹொங்கொங் உள்ளிட்ட சில நாடுகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தடுப்பூசியின் ஊடாக கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் மீறிய வலுவை இந்த வைரஸ் கொண்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிப்பட்டுள்ளது.