குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 06 வயதான மற்றுமொரு சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று (28) அதிகாலை உயிரிழந்துள்ளார். அதற்கமைய, கிண்ணியா – குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது.

கடந்த 23 ஆம் திகதி படகுப்பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளாகதில் பாடசாலை மாணவர்கள் உட்பட 06 பேர் உயிரிழந்திருந்தனர்.

விபத்தில் காயமடைந்த பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.