முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில், முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளரும் முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பொருளாளருமான  விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில்,    இராணுவ வீரர்கள் மூவர், முல்லைத்தீவு பொலிஸாரால், இன்று (28) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவத்தை கண்டித்து,  இன்று, முல்லைத்தீவில்  பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், இவர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.