லண்டனில் வசிக்கும் தோழர் தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் நிதிப்பங்களிப்பில் வவுனியா திருநாவற்குளத்தில் 70 குடும்பங்களுக்கான 2000/- பெறுமதியான நிவாரண பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.

இவ் நிகழ்வில் புளொட் அமைப்பின் வவுனியா மாவட்ட அமைப்பாளரும், வவுனியா நகர சபையின் உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் மோகன், புளொட் அமைப்பின் நிர்வாக செயலாளர் தோழர் பற்றிக், புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினரும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தலைவருமான தர்மலிங்கம் யோகராஜா, புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினரும் வவுனியா நகர சபையின் உறுப்பினருமான சுந்தரலிங்கம் காண்டீபன், செட்டிகுளம் பிரதேச சபையின் உறுப்பினர் பரிகரன், புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினரும் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்க தலைவருமான இரவீந்திரன், புளொட் அமைப்பின் மத்திய குழு உறுப்பினர் ரவி மற்றும் சதீஸ், சுரேஷ், றூமி, சந்திரன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.