முல்லைதீவு மாவட்ட ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் மகளிர் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் கனுக்கேணியில் பொருளாளர் சிவநேசன் மாவட்ட நிதி பொறுப்பாளர் தோமாஸ், கலைஞர் தவராஜா, செயலாளர் யூட்சன் போன்றோர் முன்னிலையில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் மகளிர் அமைப்பு நிர்வாகம் பிறிதொரு நாளில் தெரிவு நடைபெறும் எனவும், மேலும் இன்றைய சமகால அரசியல் நிலைகுறித்து ஆராயப்பட்டதுடன், மகளிர் ஒருங்கிணைப்புக்குழுவினால் தெரிவு செய்யப்பட்ட சிலருக்கு யாழப்பானத்தில் இருந்து வந்து கூட்டத்தில் கலந்து கொண்ட தயாபரன் அவர்களின் ஏற்பாட்டில் கனடாவில் வசிக்கும் லக்ஸ்மன் ஸ்ரீகல்யாணி தம்பதிகளின் புதல்வன் ஆதிரனின் முதலாவது பிறந்த தினத்தை முன்னிட்டு 32 பேருக்கு உலருணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பஞ்சலிங்கம் ஸ்ரீ, கிஷோர் , ராஜா , ரஞ்சன் விக்ணா போன்றோரும் கலந்து கொண்டிருந்தனர்.