நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ, உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு புதுடெல்லியை சென்றடைந்துள்ளார். அவரை, இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட வரவேற்றார்.

நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ, புதுடெல்லியில் தங்கியிருக்கும் காலத்தில், இந்திய அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய தரப்பினருடன் இருதரப்பு பேச்சுவார்த்தையி்ல் ஈடுபடுவார். அத்துடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என தெரியவருகிறது.