கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் அமைச்சர் சிறிசேன குரே தனது 90 ஆவது வயதில் காலமானார். சிறிசேன குரே 1979 முதல் 1989 வரை கொழும்பு மேயராக இருந்தார்.  அத்துடன், 1989 பாராளுமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அத்துடன்,  ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின்  அமைச்சரவையில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக செயற்பட்டார்.