Header image alt text

நாட்டில் மேலும் 541 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 563,061 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. Read more

லண்டனில் வசிக்கும் தோழர் தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் நிதிப்பங்களிப்பில் வவுனியா திருநாவற்குளத்தில் 70 குடும்பங்களுக்கான 2000/- பெறுமதியான நிவாரண பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது. Read more

காந்தீயம் அமைப்பின் செயற்பாட்டாளரும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி) அதி சிரேஷ்ட உறுப்பினரும் பொதுச்செயலாளருமான அமரர் சுப்பிரமணியம் சதானந்தம் (தோழர் ஆனந்தி அண்ணர்) அவர்களின் நினைவஞ்சலி நிகழ்வும் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் யாழ் நாச்சிமார்கோவிலடி சரஸ்வதி மண்டபத்தில் இன்று முற்பகல் 10.30 மணியளவில் ஆரம்பமாகி 1.30 மணிவரையில் நடைபெற்றது. Read more

வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகப் பகுதிகளில் ஊடக சுதந்திரம் மறுக்கப்பட்டு இராணுவத்தினுடைய அராஜக செயற்பாடுகள் தலைதூக்கியுள்ளதாக தெரிவித்த சிவகுரு ஆதீன குருமுதல்வர் வேலன்சுவாமிகள், எனவே வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகப் பகுதிகளிலிருந்து இராணுவம் வெளியேறவேண்டும் எனவும் கூறினார். Read more

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 27 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. Read more

நாட்டில் மேலும் 532 பேருக்கு இன்றையதினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 562,310 ஆக அதிகரித்துள்ளது.

குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 06 வயதான மற்றுமொரு சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று (28) அதிகாலை உயிரிழந்துள்ளார். அதற்கமைய, கிண்ணியா – குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது. Read more

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில், முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளரும் முல்லைத்தீவு ஊடக அமையத்தின் பொருளாளருமான  விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில்,    இராணுவ வீரர்கள் மூவர், முல்லைத்தீவு பொலிஸாரால், இன்று (28) கைதுசெய்யப்பட்டுள்ளனர். Read more

ஆனந்தி அண்ணர்:
தேவை உணர்ந்து வாழ்ந்த அரசியற் கடமையாளன்

— குரு இரத்தினலிங்கம்

அரசியல் என்றால் என்னவென்ற கேள்விக்கு, தான் சார்ந்த சமூகத்தின் தேவைகளை பூர்த்தி செய்வது, என்பதே பொருத்தமான பதிலாக இருக்கும். Read more