மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (02) பிறப்பித்தது. ஊடகவியலாளர் சந்திப்பில், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார் என அவருக்கு எதிராக குற்றச்சாட்டப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.