மறு அறிவித்தல் வரை நாடாளவிய ரீதியில் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பாகங்களிலும், கடந்த 24 மணி நேர காலப்பகுதியில் சுமார் 20 சமையல் எரிவாயு தொடர்பான வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலை இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (02) முதல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனமும் உறுதி செய்துள்ளது.

எவ்வாறாயிலும், சந்தையில் தட்டுப்பாடு நிலவும் லாவ்ஸ் காஸ் நிறுவனம் சிலிண்டர் விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் எவ்விதமான அறிவித்தல்களையும் இதுவரை வெளியிடவில்லை.