தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் முக்கிய தோழரான மறைந்த தோழர் மாறன் (மார்க்கண்டு தேவதாசன்) அவர்களின் மூத்த சகோதரரும், காந்தீயம் அமைப்பின் செயற்பாட்டாளரும், கழகத்தின் முன்னைநாள் மத்திய குழு உறுப்பினருமான தோழர் மார்க்கண்டு ராமதாசன் அவர்கள் நேற்று (03.12.2021) கொழும்பில் இயற்கை எய்தினார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.

அவரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொண்டு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியையும் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(DPLF)