கிளிநொச்சி, உமையாள்புரம் சோலை நகர் பகுதியில் குண்டொன்று வெடித்ததில் ஒருவர் மரணமடைந்தார். சம்பவத்தில் காயமடைந்த 13 வயதான சிறுவன் , கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிடைத்த மர்மப் பொருளொன்றை கிரைண்டர் ஒன்றினால், வெட்டிக்கொண்டிருத போதே, இன்று (05) பிற்பகல் 3.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 இச்சம்பவத்தில்,சிவலிங்கம் யுவராஜ் (வயது 25) உயிரிழந்துள்ளார்.  சிவலிங்கம்  நிலக்சன் என்ற சிறுவன் படுகாயமடைந்துள்ளார் எனத் தெரிவித்த கிளிநொச்சி பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.

வெடிப்பு சம்பவம்  இடம்பெற்ற  வீட்டை சூழவுள்ள சில பகுதிகளிலும் ஆபத்தான வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது