கிண்ணியா – குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் கவிழ்ந்த விபத்தில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதற்கமைய, குறிஞ்சாக்கேணி மிதப்பு பாலம் கவிழ்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வடைந்துள்ளது.

கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு மரணித்துள்ளார்.