கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த, வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரே தனது 83ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.