இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (10) காலை இந்தியாவின் புதுடெல்லிக்கு பயணமானார். இந்தியாவில் விமான விபத்தில் உயிரிழந்த இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக இராணுவத் தளபதி டெல்லி சென்றுள்ளார்.

பிபின் ராவத்தின் இறுதிச் சடங்குகள் இராணுவ மரியாதையுடன் இன்று பிற்பகல் நடைபெறுகிறது.

கடந்த 8ஆம் திகதி இராணுவ தலைமை தளபதி ஜெனரல் பிபின் ராவத் மற்றும் அவரது பரிவாரங்களுடன் சென்ற ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் இராணுவ தலைமை தளபதி மற்றும் அவரது மனைவி உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.

விமானத்தின் கறுப்புப் பெட்டியும் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை