சுவிஸில் வசிக்கும் பிறேமானந்தன் கனிஷ்கா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களால் வழங்கப்பட்ட 30,000/= நிதியுதவியில் வவுனியா கல்வீரன்குளம் உமா கிராம வளர்ச்சித் திட்டத்தில் அமைந்துள்ள மாதிரி வீட்டின் கூரை வேலை இடம்பெற்று வீட்டிற்கான வர்ணப்பூச்சு வேலையும் இடம்பெற்றுள்ளது.
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் க.சந்திரகுலசிங்கம் (தோழர் மோகன்) கழக நிர்வாக பொறுப்பாளர் தோழர் பற்றிக் ஆகியோர் இதற்கான ஒழுங்குபடுத்தலை மேற்கொண்டிருந்தார்கள்.