பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 13 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 4 மணி தொடக்கம் 14 ஆம் திகதி நள்ளிரவு வரை ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க கூட்டமைப்பு அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தவுள்ளது.

தபால் ஊழியர்கள் மற்றும் தபால் திணைக்களத்துக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.