தமிழ் பேசும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் சந்திப்பு நேற்று கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள குளக் டவர் விடுதியில் இரா.சம்பந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் , தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம், புளொட் சார்பில் அதன் உபதலைவர்களுள் ஒருவரான ராகவன், ஈ.பி.ஆர்.எல். எவ் சார்பில் சர்வேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

இதன்போது, 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை இல்லாமல் செய்வதற்கு அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு எதிராக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக விரிவாக ஆராயப்பட்டது இது சம்மந்தமாக எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் கூடி ஆராய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது அத்துடன் ஒரு நியாயமான அரசியல் தீர்வைப் பற்றியும் கலந்துரையாடப்பட்டது.