இலங்கையில் 12 வயதுக்கும் 15 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு ஒரு டோஸ் பைசர் தடுப்பூசியை போடுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி நிபுணத்துவ குழுவால் இது அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
இதேவேளை, கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்றுக்கொண்ட 20 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.