பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் தையிட்டி கலைமகள் சனசமூக நிலையத்திற்கு தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
தெல்லிப்பளை பிரதேச செயகத்தில் பிரதேச செயலர் சிவசிறீ தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கழகத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பா.கஜதீபன் கலந்து கொண்டு சனசமூக நிலைய நிர்வாகத்தினரிடம் தளபாடங்களை கையளித்தார்.