நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்கும் அல்லது இரகசியமாக பதியும் எந்தவித செயற்பாடுகளையும் பாதுகாப்பு தரப்பினரோ அல்லது புலனாய்வுத்துறையோ முன்னெடுக்கவில்லை என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

மேலும், இதற்கான தொழிநுட்ப வசதிகளும் எம்மிடத்தில் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இதனை கூறினார்.

ஒரு சில  விசாரணைகளுக்காக தகவல்கள் அவசியப்படும் பட்சத்தில் நீதி மன்றத்திற்கு அவற்றை ஒப்படைக்க வேண்டியுள்ள சந்தர்ப்பங்களில் நீதிமன்றம் வழங்கும் கட்டளைக்கு அமைய குறித்த சேவை வழங்குனரின் அனுமதியுடன் இவற்றை நாம் முன்னெடுப்போம் என்றும் அவர் கூறினார்.