Header image alt text

வவுனியா திருநாவற்குளத்தில் அமைந்துள்ள உமாமகேஸ்வரன் முன்பள்ளியின் புதிய குடி நீர் இணைப்பிற்காகவும், உள்ளக அபிவிருத்திக்கு என விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக புளொட் அமைப்பின் கனடா செயற்பாட்டாளர் தோழர் ராஜ் அவர்களின் திருமண நாளை முன்னிட்டு தோழர் ராஜ் அவர்களினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட முப்பதினாயிரம் ரூபாவினை
(ரூபா 30 000/-) புளொட் வவுனியா மாவட்ட அமைப்பாளரும் வவுனியா நகரசபை உறுப்பினருமான சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களினால் இன்று வழங்கிவைக்கப்பட்டது. Read more

மறைந்த கழகத் தோழரின் மனைவியின் மருத்துவ செலவுக்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் லண்டன் கிளை செயற்பாட்டாளர்களான தோழர்கள் சிவபாலன், வேந்தன் ஆகியோர் இணைந்து மாதாமாதம் 10,000 ரூபாய் வழங்குவதாக தெரிவித்து கடந்த ஐப்பசி மாதம் முதல் வழங்கி வருகின்றனர். Read more

பல்கலைக்கழக மாணவியின் கல்வி நடவடிக்கைக்கு உதவியாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் லண்டன் கிளை செயற்பாட்டாளர் தோழர் சிவபாலன் அவர்கள் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் மாதாமாதம் 5000 ரூபாய் நிதியுதவி வழங்கி வருகின்றார். Read more

மன்னாரில் வறிய நிலையிலுள்ள பல்கலைக்கழக மாணவி ஒருவரின் கற்றல் செயற்பாட்டை மேம்படுத்துவதற்காக ஜெர்மனியில் இருந்து சமூக சேவையாளர்கள் இணைந்து தோழர் ஜெகநாதன் அவர்களின் ஊடாக அனுப்பி வைத்த ரூபாய் 100,000/= நிதியில் மடிக்கணனி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கையை அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. Read more

வௌிநாடுகளிலுள்ள மூன்று இலங்கை தூதரகங்களை மூடுவதற்கு வௌிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. நைஜீரியாவிலுள்ள இலங்கை தூதரகத்தையும் ஜெர்மனியிலுள்ள பிரேங்பர்ட் மற்றும் சைப்பிரஸிலுள்ள இலங்கை கன்சியூலர் அலுவலகங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. Read more

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களை பெற்றுக்கொள்வது உட்பட பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளை  இணையத்தில் பெற்றுக்கொள்ள முடியும். Read more

ஒமிக்ரோன் தொற்றாளர்கள் கண்டறியப்படும் சூழலில் பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடிக்காமல் செயற்படும் போது நாடு பாரிய ஆபத்தான நிலையை நோக்கி செல்லக்கூடும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார். Read more

சர்ச்சைக்குரிய எரிவாயு நிறுவனங்களான லிட்ரோ மற்றும் லாப் இன் தலைவர்கள் இன்று (17) காலை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். Read more