மறைந்த கழகத் தோழரின் மனைவியின் மருத்துவ செலவுக்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் லண்டன் கிளை செயற்பாட்டாளர்களான தோழர்கள் சிவபாலன், வேந்தன் ஆகியோர் இணைந்து மாதாமாதம் 10,000 ரூபாய் வழங்குவதாக தெரிவித்து கடந்த ஐப்பசி மாதம் முதல் வழங்கி வருகின்றனர்.
மேற்படி தோழர்கள் இருவரும் இணைந்து வழங்கிய இம்மாதத்திற்கான 10,000 ரூபாய் பணம் மறைந்த கழகத் தோழரின் மனைவியின் கணக்கிலக்கத்திற்கு வைப்பிலிடப்பட்டுள்ளது. இவ்வுதவியை வழங்கி வரும் தோழர்கள் சிவபாலன், வேந்தன் ஆகியோர்க்கு மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.