சர்ச்சைக்குரிய எரிவாயு நிறுவனங்களான லிட்ரோ மற்றும் லாப் இன் தலைவர்கள் இன்று (17) காலை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க மற்றும் லாப் எரிவாறு நிறுவனத்தின் தலைவர் டபிள்யு.கே. எச். வேகபிட்டிய ஆகியோருக்கு இன்று காலை 10.00 மணிக்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இரண்டு தலைவர்களுக்கு மேலதிகமாக, இலங்கை கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.