பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் அவர்களால் திருநெல்வேலியில் அமைந்துள்ள சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் சைவ சிறுவர் இல்லத்திற்கு மடிக்கணினி ஒன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட மடிக்கணினியை இன்றைய தினம் கழகத்தின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான பா.கஜதீபன் சைவ வித்தியா விருத்திச் சங்க நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.