நாடளாவிய ரீதியில் நாளை (21) காலை 08 மணி தொடக்கம் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

07 கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை இன்றைய தினம் ஐந்து மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.