எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப எதிர்வரும் புதன்கிழமை முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

தனியார் பஸ் உரிமையாளர் சங்கங்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, கட்டண திருத்தம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.